தலைநகர் டெல்லியில் 13 லட்சம் இருசக்கர வாகனங்கள், 3 லட்சம் கார்கள், 17 லட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு உரிய மாசு கட்டுப்பாடு சான்றிதழ் பெறாமல் இயங்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதனால் போக்குவரத்து துறை எச்சரிப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி வாகனங்கள் மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் குறிப்பிட்டகாலக்கெடுவுடன் மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால் காலாவதியான வாகன உரிமையாளர்கள் மாசு குறித்த சோதனைகளை மீண்டும் மேற்கொண்டு சான்றிதழ் வாங்க வேண்டும் .
அப்படி பெறாமல் இருக்கும் வாகன உரிமையாளர்களின் விலாசங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். அதன்படி சான்று வைத்துக் கொள்ளாமல் இருப்பவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று டெல்லி போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அல்லது சான்றில்லாத வாகனங்களின் உரிமையாளர்களுக்கு ஆறு மாதம் வரை சிறை தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்பட வாய்ப்புள்ளது என்று கூறப்படுகின்றது.