Categories
உலக செய்திகள்

2023 மக்கள் தொகை: இந்தியா சீனாவை மிஞ்ச வாய்ப்பு இருக்கு?… அறிக்கை வெளியிட்ட ஐ..நா….!!!!

ஐக்கிய நாடுகள் சபையின் சமீபத்திய கணிப்புகளின் அடிப்படையில் உலக மக்கள்தொகை 2030ம் வருடத்தில் சுமார் 8.5 பில்லியனாகவும், 2050-ஆம் ஆண்டில் 9.7 பில்லியனாகவும் வளரக்கூடும் என கணக்கிட்டுள்ளது. அத்துடன் இது 2080-களில் சுமார் 10.4 பில்லியன் மக்கள் தொகையை கொண்டிருக்கும் எனவும் 2100 வரை அந்த நிலையில் இருக்கும் எனவும் அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளது. மக்கள்தொகை பெருக்கம் தொடர்பாக ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கூறியதாவது “உலக மக்கள் தொகை நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் பூமியில் மக்கள் தொகை எட்டு பில்லியனாக அதிகரிப்பதை எதிர்பார்க்கிறோம்.

இது நம் பன்முகத் தன்மையைக் கொண்டாடுவதற்கும், நமது பொதுவான மனிதகுலத்தை அங்கீகரிப்பதற்கும், ஆரோக்கியத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களைக் கண்டு வியப்பதற்கும் ஒரு சந்தர்ப்பம் ஆகும். நீட்டிக்கப்பட்ட ஆயுட்காலம், தாய் மற்றும் குழந்தை இறப்பு விகிதங்கள் வியத்தகு முறையில் குறைக்கப்பட்டு இருக்கிறது. அதே சமயத்தில் இது நம் கிரகத்தை கவனித்துக்கொள்வதற்கான, நமது அனைவருக்குமான பொறுப்பை நினைவூட்டுகிறது. அதுமட்டுமன்றி ஒருவருக்கொருவர் நம் கடமைகளை நாம் இன்னும் எங்கே இழக்கிறோம் என்பதை குறித்து சிந்திக்க ஒரு தருணம்” என்று அவர் கூறினார்.

ஐ.நா-வின் அறிக்கையின்படி 2023-ம் வருடத்தில் உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடான சீனாவை இந்தியா விஞ்சும் என கணிக்கப்பட்டு இருக்கிறது. 2022-ல் தலா 1.4 பில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகையுடன், சீனா மற்றும் இந்தியா இந்த பிராந்தியங்களில் மிகப் பெரிய மக்கள்தொகையைக் கொண்டுள்ளது. அறிக்கையின் அடிப்படையில் சீனாவின்1.426 பில்லியனுடன் ஒப்பிடும்போது, 2022-ம் வருடத்தில் இந்தியாவின் மக்கள்தொகை 1.412 பில்லியனாக இருக்கிறது.

இது 2023-ம் ஆண்டில் இந்தியாவானது, சீனாவைமிஞ்சும் எனவும் 2050 ஆம் வருடத்தில் இந்திய மக்கள்தொகை 1.668 பில்லியன்ஆக இருக்கும் எனவும் கணிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் சீன மக்கள்தொகையானது 1.317 பில்லியனாக இருக்குமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022ம் வருடத்தில் உலகின் அதிகமான மக்கள் தொகை கொண்ட 2 பகுதிகள் கிழக்கு மற்றும் தென் கிழக்கு ஆசியாவாகும். உலக மக்கள் தொகையில் 2.3 பில்லியன் மக்கள்(29 %) அங்கிருப்பார்கள். அத்துடன் மத்திய மற்றும் தெற்குஆசியா 2.1 பில்லியனுடன், மொத்த உலக மக்கள் தொகையில் 26 சதவீதமாக இருப்பார்கள் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |