Categories
தேசிய செய்திகள்

“என்ன மாதிரி சிங்கிளா இருங்க” மக்கள் தொகையை ஈசியா குறைக்கலாம்…. மந்திரி டெம்ஜென் கருத்து…!!!

திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தால் மக்கள் தொகையை எளிதில் கட்டுப்படுத்தலாம் என மந்திரி ஒருவர் கூறியுள்ளார்.

நாகலாந்து மந்திரி டெம்ஜென் இம்னா அலோக் வட இந்தியர்களின் கண்கள் தங்கள் சிறியதாக இருப்பதால் நிகழ்ச்சிகளின் போது தூங்குவதற்கு வசதியாக இருக்கிறது என்று கூறினார். இதன் மூலம் ஒரே நாளில் இந்தியா முழுவதும் பிரபலமானார். இன்று உலக மக்கள் தொகை தினம் கொண்டாடப்படுகிறது.

இதை முன்னிட்டு மந்திரி டெம்ஜென் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு மக்கள் தொகை பிரச்சனைகளில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். அதன் பிறகு மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் அதற்கு என்னை போல் சிங்கிளாக இருங்கள் என்று கூறியுள்ளார். அதாவது திருமணம் செய்து கொள்ளாமல் இருங்கள் என்பதே தான் அப்படி கூறியுள்ளார்.

Categories

Tech |