பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் பரோடா வங்கி கடன்களுக்கான அடிப்படை வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது. அதன்படி MCLR வட்டி வீதத்தை 0.10% முதல் 0.15 சதவீதம் வரை உயர்த்தி உள்ளது. இந்த வட்டி உயர்வானது நாளை முதல் அமல்படுத்தப்படுவதாக வங்கி சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கடன்களுக்கான வட்டி விகிதத்தை வங்கி உயர்த்துவதால் கடன் செலுத்துவோருக்கு இஎம்ஐ தொகை உயரும்.
ஏற்கனவே கடன் செலுத்துவோர், புதிதாக கடன்கள் பெற விண்ணப்பித்தவர்கள் என இரு தரப்பினருக்குமே இஎம்ஐ கட்டணம் உயரும். அடிப்படை வட்டி விகிதம் உயர்வின் காரணமாக வீட்டு கடன், கார் கடன், தனி நபர் கடன் போன்ற கடனுக்கான இஎம்ஐ கட்டணமும் உயரும். சமீபத்தில் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி வீதத்தை 4. 90 சதவீதமாக உயர்த்தியதால் பல்வேறு வங்கிகளும் வட்டியை உயர்த்தி வருகின்றன. அந்த வரிசையில் தற்போது பேங்க் ஆப் பரோடா வங்கியும் உயர்த்தி உள்ளது.