வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் ஜெயக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அபி கிறிஸ்டின் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் பாலிடெக்னிக் படித்து முடித்த அபி கிறிஸ்டின் பல்வேறு நிறுவனங்களில் வேலை தேடி வந்துள்ளார். ஆனால் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த வாலிபர் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் உடலை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.