கார் மீது வேன் மோதிய விபத்தில் 8 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தேசிகாபுரம் விலக்கு பகுதியில் தனியார் மில் மேன் சென்று கொண்டிருந்தது. இந்த வேன் சாலையில் திரும்ப முயன்ற போது ராஜபாளையம் நோக்கி சென்ற கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார் ஓட்டுநர் தாரிக், அவரது நண்பர் ஹக்கீம், மினி வேனில் பயணித்த வள்ளி, சித்தம்மாள், மணிகண்டன், கணபதியம்மாள், தேசியம்மாள், பேச்சியம்மாள் ஆகிய 8 பேரும் படுகாயமடைந்தனர்.
அவர்களை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.