பிரதோஷத்தை முன்னிட்டு நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்,அலங்கார பூஜைகள் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மிகவும் சிறப்பு பெற்ற கட்டாரிமங்கலம் சிவகாமி அம்பாள் சமேத அழகிய கூத்தர் திருக்கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்நிலையில் அழகிய கூத்தர், சிவகாமி அம்மாளுக்கு பால், பன்னீர் உள்ளிட்ட பொருட்களை வைத்து சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.
மேலும் அழகிய கூத்தருக்கும் சிவகாமி அம்பாளுக்கும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதனையடுத்து கோவில் வளாகத்தில் அமைந்துள்ள நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை, தீபாாரதனை நடைபெற்றது. இந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.