Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மது அருந்தியதை கண்டித்த மனைவி…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவிந்தன்பட்டி கிராமத்தில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி தொழிலாளியான மணிராஜ் என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு பேச்சியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளனர். மேலும் மணிராஜ் குடித்துவிட்டு அடிக்கடி மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் மணிராஜ் வழக்கம்போல் மது அருந்திவிட்டு மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனை அவரது மனைவி கண்டித்துள்ளார்.

இதில் மனமுடைந்த மணிராஜ் வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துவிட்டு மயங்கி கிடந்துள்ளார். இதனைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் மணிராஜை உடனடியாக மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு மனிராஜை அனுப்பி வைத்தனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மணிராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த பசுவந்தனை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |