Categories
மாநில செய்திகள்

எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்…. ரயில் பயணிகளுக்கு தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் சேவைகள் அனைத்தும் தற்போது மீண்டும் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட ஈரோடு -நெல்லை பயணிகள் ரயிலை மீண்டும் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி ஈரோட்டில் இருந்து நெல்லைக்கு நேற்று மதியம் 1.35 மணிக்கு எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. தினமும் மதியம் 1.35 மணிக்கு ஈரோட்டில் இருந்து புறப்படும் ரயில் எல்லைக்கு இரவு 9.45 மணிக்கு சென்றடையும்.

இதையடுத்து மறுமார்க்கமாக நிலையிலிருந்து காலை 6.15 மணிக்கு புறப்படும் ரயில் மதியம் 2.30 மணிக்கு ஈரோடுக்கு வந்தடையும். அதனைப் போலவே ஈரோடு -மேட்டூர் அணை எக்ஸ்பிரஸ் ரயிலும் நேற்று முதல் மீண்டும் இயக்கப்பட்டது. இந்த ரயில் தினமும் அதிகாலை 5 மணிக்கு ஈரோட்டில் இருந்து புறப்பட்டு காலை 8.15 மணிக்கு மேட்டூர் அணைக்கு சென்றடையும். இரவு 7 மணிக்கு மேட்டூர் அணையில் இருந்து புறப்பட்டு 10 மணிக்கு ஈரோடு வந்தடையும். அதனைப் போலவே ஈரோடு வழியாக கோவை மற்றும் சேலம் எக்ஸ்பிரஸ் ரயில்களும் நேற்று முதல் இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |