Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் மக்கள் போராட்டம்…. எதற்கு தெரியுமா?…. வன்முறையில் ஈடுபட்ட போலீஸ்..!!!

சீனா ஹெனான் மாகாணத்தில் இயங்கி வரும் சில வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களின் கோடிக்கணக்கில் வைப்புத் தொகையை திடீரென முடக்கி விட்டதாக கூறப்படுகிறது. அதாவது அங்குள்ள 4 வங்கிகள் மொத்த 5.8 பில்லியன் அமெரிக்க டாலர் தொகையை முடக்கி விட்டதாகவும், இதனால் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பந்தப்பட்ட வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், தங்களின் பணத்தை திருப்பி தர வலியுறுத்தி தலைநகர் ஜெங்சோவில் உள்ள சீன மத்திய வங்கியின் முன்பு நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.

அங்கிருந்து கலந்து போகும்படி போலிசார் எச்சரித்தனர். அதனை ஏற்க மறுத்த போராட்டக்காரர்கள் சீன மத்திய வங்கி முற்றுகையிட்டனர். அதனை தொடர்ந்து சாதாரண உடையில் வந்திருந்த பாதுகாப்பு படையினர் போராட்டக்காரர்களை கலைக்க முயற்சி செய்தனர். இதில் இரு தரப்புகளுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. மேலும் சற்று நேரத்தில் இது பெரும் வன்முறையாக வெடித்ததில் போராட்டக்காரர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் பலர் படுகாயம் அடைந்தனர்.

Categories

Tech |