இலங்கையில் கடும் பொருளாதாரம் நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இதனால் மக்கள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் அதிபர் கோத்தபயா ராஜபக்சே அரசுக்கு எதிராக போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகின்றனர். இதற்கிடையில் ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று இலங்கை அதிபர் மாளிகை முன் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டினர். அதன் பிறகு கொழும்புவில் உள்ள அதிபர் கோத்தபயா வீட்டிற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் வீட்டை அடித்து நொறுக்கினார். போராட்டக்காரர்கள் வருவதற்கு முன் கோத்தபயா குடும்பத்துடன் தப்பித்து சென்று ஓடிவிட்டார். இதனையடுத்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தனது பதிவியை ராஜினாமா செய்தார். அதனைப் போல அதிபர் கோத்தபாய ராஜபக்சே தனது பதிவியை வரும் 13 ராஜன் செய்வார் என்று நாடாளுமன்ற சபாநாயகர் தெரிவித்துள்ளார். அதனைத்தொடர்ந்து அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து கூட்டாட்சி அமைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கையில் எதிர்க்கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் சிறப்புகூட்டம் கடந்த 10 ஆம் தேதி கூட்டம் நடைபெற்றது.
அந்தக் கூட்டத்தில் அதிபர் பதவிக்கான வேட்பு மனுக்கள் ஜூலை 19ஆம் தேதி ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் 20 ஆம் தேதி புதிய அதிபர் தேர்வு செய்யப்படும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கையின் அதிபர் பதவிக்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது குறித்த தீர்மானத்தை கட்சியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார கொண்டுவந்துள்ளார். அதனை நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கூட்டத்தில் எதிர்க்கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா உறுதிப்படுத்தியுள்ளார். அதனை தொடர்ந்து பாராளுமன்றத்தில் சமகி ஜனா பலவேகயா கட்சிக்கு 50 உறுப்பினர்கள் உள்ளனர். அதிபர் தேர்வு தொடர்பான பாராளுமன்ற வாக்கெடுப்பில் வெற்றி பெற சஜித் பிரமோசாவுக்கு 113 எம்.பி.க்கள் ஆதரவு தேவை. இதற்கிடையில் தாய்நாட்டை பொருளாதாரத்தை மீண்டும் மீட்டெடுக்க வேண்டும் என்றும் இதற்கு எதிர்கட்சிகள் தயாராக இருப்பதாகவும் சஜித் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் நாட்டின் பொருளாதாரத்தை மீட்பது, வேலைவாய்ப்பு திட்டத்தை செயல்படுத்த மாற்றுத் தேர்வு எதுவும் இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.