Categories
சினிமா தமிழ் சினிமா

காதலரை கரம் பிடித்தார் யாரடி நீ மோகினி நடிகை….. இனிதே நடந்தேறிய நட்சத்திரா திருமணம்….!!!!

யாரடி நீ மோகினி என்ற சீரியலில் வெண்ணிலாவாக பிரபலம் அடைந்தவர் நடிகை நட்சத்திரா. இவர் தற்போது கலர்ஸ் தமிழில் வள்ளி திருமணம் என்ற சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் இவரின் நடிப்பு அனைவரையும் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இவர் நடிகர் விஜயின் உறவுக்காரரான விஷ்வாவை காதலித்து நேற்று திருமணம் செய்து கொண்டார்.

விஷ்வாவும் அவரது சகோதரி திவ்யாவும் ஜீ தமிழ் சேனலில் சீரியல் தயார்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கேரளாவில் குடும்ப கோயிலில் இவர்கள் திருமணம் நடைபெற்றது. விரைவில் சென்னையில் வரவேற்பு நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் திடீரென்று திருமணம் செய்து கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.  இதை பார்த்து இவரது ரசிகர்கள் நட்சத்திராவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |