Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தொலைபேசி ஒயர்களை வெட்டிய மர்ம நபர்கள்…. அவதியில் மக்கள்….. வலைவீசி தேடும் போலீசார் …!!!

ஈரோடு மாவட்ட தாளவாடி  ஆசனூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில்  30க்கும் மேற்பட்ட மலை கிராமங்களில்  மக்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் செல்போன் மற்றும் தொலைபேசி சேவை இல்லாமல் பொதுமக்கள் சிரமப்பட்டு வருந்தனர். இதனையடுத்து பி.எஸ்.என்.எல். பைபர் ஒயர் அமைக்கப்பட்டது. இதனால் மாவள்ளம், கெத்தேசால், தேவர்நத்தம், குழியாடா உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட மலை கிராமங்களுக்கு செல்போன் சேவை கிடைத்தது.

இந்நிலையில் நேற்று மாலை ஆசனூரில் இருந்து மாவள்ளம் வரை 15 கிலோ மீட்டர் தூரத்துக்கு மர்ம நபர்கள் பி.எஸ்.என்.எல். பைபர் கேபிளை வெட்டி துண்டித்து விட்டு சென்று விட்டார்கள். இதனால் நேற்று முதல் செல்போன் சேவை இல்லாமல் மலை கிராம மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். இது குறித்து ஆசனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Categories

Tech |