மகாராஷ்டிராவில் மேல் நோக்கி காற்றில் பறக்கும் அருவி ஒன்று உள்ளது. இது தொடர்பான ரம்யமான வீடியோ ஒன்று ட்விட்டரில் பதிவிடப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை காரணமாக கோவா,மகாராஷ்டிரா மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட சில மாநிலங்களில் கடந்த சில வாரத்திற்கு மேலாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. அதனால் வெள்ளை நீரில் சிக்கிய பொதுமக்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் செயல்பட்டு வருகிறார்கள். அதிலும் குறிப்பாக மகாராஷ்டிராவில் சுமார் 130 கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
இதனால் அங்கு ஆரஞ்சு அலெர்ட் எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அருவி ஒன்றில் அருவி நீர் தலைகீழாக மேல்நோக்கி பறப்பது காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரின் கொங்கன் கடற்கரைக்கும் டேகான் பீடபூமியில் உள்ள பகுதி நானேகாட். இது மும்பையில் இருந்து கிழக்கே 165 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் இந்த மலைத்தொடரில் ஜோக் என்ற நீர்வீழ்ச்சி உள்ளது. அந்த நீர்வீழ்ச்சியில் விழும் நீர் காற்றழுத்த தாழ்வு காரணமாக மேல் நோக்கி காற்றில் பறக்கிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
When the magnitude of wind speed is equal & opposite to the force of gravity. The water fall at its best during that stage in Naneghat of western ghats range.
Beauty of Monsoons. pic.twitter.com/lkMfR9uS3R— Susanta Nanda (@susantananda3) July 10, 2022