Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் தூய்மை பணி தீவிரம்…. 63 இடங்களில் 452.39 டன் கட்டிடக்கழிவுகள் அகற்றம்…. மாநகராட்சி நிர்வாகம் தகவல்…!!!

சாலைகளை சுத்தப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் இருக்கும்‌ 5,270 கிலோமீட்டர் தூரம் கொண்ட 34,640 சர்வீஸ் சாலைகள், 387 கிலோமீட்டர் நீளமுள்ள 471 பேருந்து வசதி சாலைகள் போன்றவைகளை மாநகராட்சி நிர்வாகம் பராமரித்து வருகிறது. இந்த சாலைகளை சுத்தம் செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த சாலைகள் 78 மெக்கானிக்கல் ஸ்வீப்பர் வாகனங்கள் மூலமாக தூய்மைப்படுத்தப்படுகிறது. இந்த தூய்மை பணியானது இரவு நேரங்களில் மட்டுமே நடைபெறுகிறது. இந்த வாகனங்கள் மூலம் 1 நாளைக்கு 30 கிலோ மீட்டர் தூரம் வரை சுத்தம் செய்யப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாநகராட்சி சார்பில் 200 வார்டுகளில் நடைபெற்ற தீவிர தூய்மை பணியில் மாநகராட்சி மேயர் பிரியா கலந்துகொண்டு மக்களுக்கு மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும் என்ற அறிவுரையை வழங்கினார். இந்த தூய்மை பணியின் போது பூங்கா, மயானம், வழிபாட்டுத்தலங்கள், ரயில்வே நிலையங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் போன்ற 28 இடங்களில்  104.93 டன் குப்பைகள் அகற்றப்பட்டது. அதன் பிறகு மருத்துவமனை மற்றும் இதர மக்கள் கூடும் 78 இடங்களில் நடைபெற்ற தூய்மை பணியின் போது 52.02 டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டது. இதேபோன்று 63 இடங்களிலிருந்து 452.92 டன் கட்டிடக்கழிவுகளும் அகற்றப்பட்டது.

Categories

Tech |