Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

குளிர்பானத்தில் நெளிந்த புழுக்கள்…. பொதுமக்களின் கோரிக்கை…. உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி…!!!

கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் அருகே ஆத்தனூர் பகுதியில் ஒரு கடை அமைந்துள்ளது. இந்த கடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக 10 ரூபாய் கொடுத்து டைலோ நிறுவனத்தின் குளிர்பானத்தை பொதுமக்கள் வாங்கியுள்ளனர். அதில் புழுக்கள் நெளிந்து கொண்டிருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் கடைக்காரரிடம் கேட்டபோது அவர் அலட்சியமாக பதில் அளித்துள்ளார். அதன்பிறகு காலாவதியான பொருட்களை விற்பனை செய்வதாகவும் தொடர் புகார்கள் எழுந்தது.

இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்தனர். இதன் காரணமாக ஆத்தனூர் பகுதியில் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். மேலும் கடைகளில் இருந்து எடுக்கப்பட்ட குளிர்பானங்களை ஆய்வகத்திற்கு சோதனைக்காக அனுப்பியுள்ளனர். இந்த அறிக்கை வந்த பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Categories

Tech |