இலங்கை நாட்டில் அதிபர் கோத்தபயராஜபக்சேவுக்கு எதிராக மக்கள் போராட்டமானது தீவிரமடைந்துள்ளது. அதாவது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அதிபரின் மாளிகையை தங்களது கட்டுப்பாட்டிற்குகீழ் கொண்டு வந்ததையடுத்து, கோத்தபய அங்கிருந்து வெளியேறி ஓட்டம் பிடித்தார்.
இதையடுத்து அவர் கடற்படை முகாம் தளத்தில் தங்கி இருப்பதாக கூறப்பட்டு வந்தது. இந்த சூழ்நிலையில் அதிபர் இலங்கையிலிருந்து வெளியேறியதாக வெளியான தகவல் உண்மையில்லை எனவும் அவர் இலங்கையில் தான் இருக்கிறார் எனவும் சபாநாயகர் மகிந்த யாப்பா தெரிவித்தார்.
இதனிடையில் இலங்கையின் இடைக் கால அதிபர் பதவிக்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பெயர் பரிந்துரைக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் அதிபர் தன் பதவிவிலகல் கடிதத்தில் கையெழுத்திட்டு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நாளை தன் பதவியை ராஜினாமா செய்வதாக கோத்தபயராஜபக்சே கடிதத்தின் மூலம் கூறி இருப்பதாக கூறப்படுகிறது.