பொதுவாக சிறுசேமிப்பு திட்டங்களில் சேர்ந்து முதலீடு செய்வதைதான் மக்கள் பெரிதும் விரும்புகின்றனர். அத்துடன் வங்கிகளை விடவும் சிறு சேமிப்பு திட்டங்கள் பாதுகாப்பானதாகவும் அதிகமான வட்டி விகிதங்கள் வழங்கப்படுவதால் கூடுதல் வருமானம் கிடைப்பதாலும் பலரும் இதில் முதலீடு செய்ய விரும்புகின்றனர். அதாவது சிறு சேமிப்பு திட்டங்களுக்கு ஒவ்வொரு 3 மாதங்களுக்கு ஒரு முறை இந்தியஅரசு வட்டி வீதத்தின்படி வட்டி விகிதமானது நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில் தற்போது ஜூலை-செப்டம்பர் மாதத்துக்கான வட்டி விகிதம் கூடியவிரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்ற சில மாதங்களாக சிறு சேமிப்பு திட்டங்களுக்குரிய வட்டி விகிதமானது மாற்றப்படாமலே இருக்கிறது. இந்த நிலையில் இப்போது வட்டிவிகிதம் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த திட்டத்தில் சேரவிரும்புவோர் அருகிலுள்ள தபால் அலுவலகங்கள் வாயிலாகவே எளிதாக திட்டங்களில் முதலீடு செய்து கொள்ளலாம். இதனிடையில் சிறுசேமிப்பு திட்டங்களில் பல சேமிப்பு நலத்திட்டங்களானது உள்ளது.
அதில் எந்தெந்த நலத்திட்டங்கள் மூலம் வாடிக்கையாளர்கள் பயனடைந்து வருகிறார்கள் என்பதை பார்க்கலாம். அதன்படி தபால் அலுவலக சேமிப்பு கணக்கு (SB), தேசிய சேமிப்பு நிரந்தர வைப்புநிதி (FD), தபால் அலுவலக தொடர் வைப்பநிதி (RD), மாத வருமானத் திட்டம் (MIS), சீனியர் சிட்டிசன் சேமிப்பு திட்டம் (SCSS), பொது வருங்கால வைப்புநிதி (PPF), செல்வமகள் சேமிப்பு திட்டம் (SSA), தேசிய சேமிப்பு சான்றிதழ் (NSC), கிசான் விகாஸ் பத்திரம் (KVP) போன்ற நலத்திட்டங்கள் உள்ளது.