இங்கிலாந்து- இந்தியா அணிகளுக்கு இடையே 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற இருக்கிறது. இருஅணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் போட்டி இன்று நடைபெறுகிறது. இத்தொடரின் வாயிலாக இந்திய அணியின் கேப்டன் ரோகித்சர்மா புது சாதனைபடைக்க இருக்கிறார். இதில் ரோகித்சர்மா இதுவரையிலும் 230 ஒரு நாள் போட்டிகளில் 44 அரை சதங்கள் மற்றும் 29 சதங்களுடன் 9283 ரன்கள் குவித்து உள்ளார். குறிப்பிட்ட வெளிநாட்டில் அதிக ஒரு நாள் சதங்கள் அடித்த ஏபிடிவில்லியர்ஸ் (தென் ஆப்ரிக்கா), சச்சின் (இந்தியா) சயித் அன்வர் (பாகிஸ்தான்) போன்றோருடன் ரோகித்சர்மா இணைந்துள்ளார். ஒருநாள் போட்டியில் 29 சதங்கள் விளாசிய ரோகித்சர்மா அதில் 7 சதங்களை இங்கிலாந்தில் அடித்திருக்கிறார்.
கடந்த 2019ஆம் ஆண்டு இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியின்போது ரோகித் ஒரு அரைசதம் உட்பட 5 சதம் அடித்தார். சென்ற 2017 சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதி ஆட்டத்தில் வங்க தேசத்துக்கு எதிராக ரோகித் தன் முதல் சதத்தை (123) அடித்தார். பின் 2018ம் வருடம் இந்தியாவின் இங்கிலாந்து சுற்றுப் பயணத்தின்போது நாட்டிங்ஹாமில் ரோகித் 137 ரன்கள் எடுத்தார். சச்சின் டெண்டுல்கர் ஐக்கியஅரபு எமிரேட்ஸில் 7 சதங்கள் அடித்தார்.
இதனிடையில் 42 போட்டிகளில் 1,778 ரன்களுடன் ஜிம்பாப்வேக்கு எதிராக 2, இலங்கைக்கு எதிராக 2 மற்றும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தானுக்கு எதிராக தலா ஒன்று. டிவில்லியர்ஸ் இந்தியாவில் 20 ஒருநாள் போட்டிகளில் 1125 ரன்கள் எடுத்தார். இவற்றில் 3 அரைசதங்கள் மற்றும் 7 சதங்கள் அடித்தார். பாகிஸ்தானின் முன்னாள் வீரரான சயீத் அன்வரும் டெண்டுல்கரைப் போன்றே ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 7 சதங்கள் அடித்துள்ளார். அவர் 51 ஆட்டங்களில் 11 அரை சதங்கள் மற்றும் 7 சதங்களுடன் 2179 ரன்கள் எடுத்து குவித்தார். ரோகித்சர்மா இன்னும் 1 சதம் விளாசினால் இந்த 3 பேரின் சாதனையை முறியடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.