நடிகர் விக்ரமை பார்த்தால் எனக்கு பொறாமையாக இருக்கிறது என இயக்குனர் ஒருவர் கூறியுள்ளார்.
சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் கோப்ரா திரைப்படத்தை இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார். இந்த படத்தை லலித்குமார் தயாரித்துள்ளார். இந்தப் படத்தில் ஹீரோயின் ஆக ஸ்ரீநிதி செட்டி நடித்துள்ளார். இந்நிலையில் ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ள கோப்ரா படம் வருகிற ஆகஸ்ட் 11-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டு விழாவில் கோப்ரா பட குழுவினர் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். அதன் பிறகு இயக்குனர் அஜய் ஞானமுத்து விழாவில் கலந்து கொண்டவர்களிடம் பேசினார்.
அவர் இமைக்கா நொடிகள் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பாகவே தயாரிப்பாளர் என்னை சந்தித்து விக்ரம் கால்ஷீட இருக்கிறது. எங்களுடன் சேர்ந்து பணியாற்ற முடியுமா என்று கேட்டார். என் மீது அவருக்கு நம்பிக்கை ஏற்பட்டது எப்படி என தெரியவில்லை. என் பெற்றோர்கள் செலவு செய்திருந்தால் கூட இவ்வளவு ரூபாய் செலவு செய்து இருப்பார்களா என தெரியவில்லை. ஆனால் லலித்குமார் என் மீதும் என் குழுவின் மீதும் உள்ள நம்பிக்கையால் மிகப்பெரிய பட்ஜெட்டில் கோப்ரா படத்தை தயாரித்துள்ளார்.
இந்த படத்தில் நடிகர் விக்ரம் சாரின் நடிப்பை கண்டிப்பாக பாராட்டியே ஆக வேண்டும். ஏனெனில் நான் 50 சதவீதம் எதிர்பார்த்தால் அவர் 100% பெர்பெக்ட்டாக நடிப்பார். இதனால் எனக்கு நடிகர் விக்ரம் சாரை பார்க்கும்போது சிறிய பொறாமை ஏற்பட்டது என்று கூறினார்.