டீனேஜ் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஹவுன்சிலோ பகுதியில் இருந்து கடந்த 19-ஆம் தேதி 16 வயது டீனேஜ் பெண் ஒருவர் பேருந்தில் ஏறியுள்ளார். இதே பேருந்தில் ஏறிய மற்றொரு நபர் டீனேஜ் பெண்ணின் பக்கத்தில் அமர்ந்தார். இவர் திடீரென டீனேஜ் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளார்.
இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் சிசிடிவி கேமராவில் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றவரின் புகைப்படம் பதிவாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த புகைப்படத்தை வைத்து காவல்துறையினர் அந்த நபரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் அந்த நபர் குறித்து ஏதேனும் விவரம் தெரிந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்கும்படியும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.