Categories
மதுரை மாவட்ட செய்திகள்

திடீரென வெடித்த துப்பாக்கி….. மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு…..!!!!

மதுரை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மத்திய தொழில் பாதுகாப்பு படை ஆயுத கட்டிடத்தில் இன்ஸ்பெக்டர் துருவ்குமார் ராய் இரவு பணியை முடித்துவிட்டு 9 எம்.எம். தோட்டா வகை துப்பாக்கியை அலுவலகத்தில் ஒப்படைத்தார். அப்போது அந்த துப்பாக்கி எதிர்பாரதவிதமாக வெடித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து பார்த்தபோது தொழில் நுட்ப கோளாறு காரணமாக துப்பாக்கி தன்னிச்சையாக வெடித்தது தெரியவந்தது. இதனால் யாருக்கும் எந்த ஒரு காயமும் ஏற்படவில்லை.

இது தொடர்பாக உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் துருவ்குமார் ராய் துப்பாக்கியை தவறுதலாக கையாண்டதாகவும், இதன் காரணமாக துப்பாக்கி வெடித்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவரை பணியிடை நீக்கம் செய்து சென்னையில் உள்ள சி.ஐ.எஸ்.எப்.டி. ஐ.ஜி. உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |