Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஆன்லைனில் விளையாடிய சிறுமி…. வீடியோ எடுத்து மிரட்டிய வாலிபர்…. பெற்றோரின் பரபரப்பு புகார்…!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

சென்னை மாவட்டத்தில் உள்ள திருமல்லைவாயல் பகுதியில் 15 வயது சிறுமி வசித்து வருகிறார். இவருக்கு ஆன்லைன் விளையாட்டு மூலம் செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த விக்னேஷ்(26) என்ற வாலிபர் அறிமுகமானார். இந்நிலையில் விக்னேஷ் சிறுமியை காதலிப்பதாக கூறியுள்ளார். இதனை அடுத்து சிறுமியை ஆபாசமாக வீடியோ காலில் பேச வற்புறுத்தி அதனை செல்போனில் பதிவு செய்துள்ளார். பின்னர் விக்னேஷ் அந்த வீடியோவை காட்டி சிறுமியை மிரட்டி அவருக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். கடந்த மாதம் சிறுமியின் பெற்றோர் வெளியே சென்றனர். அந்த நேரம் விக்னேஷ் சிறுமியின் வீட்டிற்கு சென்று அவருக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். உடனடியாக வீட்டிற்கு திரும்பி வந்த சிறுமியின் பெற்றோர் தங்களது மகளுடன் விக்னேஷ் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இதனை அடுத்து சிறுமி நடந்துவற்றை தனது பெற்றோரிடம் தெரிவித்து அழுதுள்ளார் இதுகுறித்து விக்னேஷிடம் கேட்டதற்கு அவர் உங்களது மகளின் ஆபாச வீடியோக்கள் என்னிடம் இருக்கிறது. 50 லட்சம் ரூபாய் கொடுத்தால் அந்த வீடியோவை அழித்து விடுவேன். கொடுக்கவில்லை என்றால் வீடியோக்களை சமூக வலைதளத்தில் வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் விக்னேஷை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |