Categories
தேசிய செய்திகள்

இதுதாங்க நம்ம இந்தியா…. அமர்நாத் குகைக்கு வரும் பக்தர்கள்…. தோளில் சுமந்து செல்லும் முஸ்லீம் சகோதர்கள்…!!

இந்துக்களை தோளில் தூக்கி சுமந்த முஸ்லிம் சகோதரர்களுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணமாக உள்ளது.

கான்பூரில் இர்ஷத் மற்றும் ஷம்ஷத் என்ற முஸ்லிம் சகோதரர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் உள்ளூரில் சரக்கு வாகனம் ஓட்டி வருகின்றனர். இவர்களது தந்தை இறந்துவிட்டதால் இர்ஷத் மற்றும் ஷம்ஷத்தை தாயார் முன்னி காய்கறிகள் விற்பனை செய்து வளர்த்துள்ளார்.  இவர்களுக்கு திடீரென அமர்நாத் குகைக்கு வரும் பக்தர்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியுள்ளது. இதனால் பாஜக எம்எல்ஏ ரகுநந்தன் பதௌரியா தலைமையில் செயல்படும் சிவ் சேவக் சமிதிக்கு சென்று முஸ்லிம் சகோதரர்கள் தங்களுடைய ஆசையை கூறியுள்ளனர்.

ஏனெனில் இந்த சங்கத்தினர் தான் அமர்நாத் குகைக்கு தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு ஒவ்வொரு வருடமும் சேவை செய்து வருகின்றனர். இந்த வருடத்திலிருந்து சிவ் சேவக் சமிதியின் மூலம் 5 இ ரக்ஷா வாகன வசதியை அறிமுகப்படுத்தியுள்ளனர். இதன் மூலம் வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எளிதாக மலை ஏற முடியும். இதனையடுத்து சகோதரர்கள் 2 பேரும்  அமர்நாத் பக்தர்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற ஆசையை சங்கத்தில் தெரிவித்து அமர்நாத் குகைக்கு தேவையான பொருட்களை குறைந்த பொருட்செலவில் தங்களுடைய சரக்கு வாகனம் மூலம் கொண்டு வந்தனர்.

அதன் பிறகு இ ரிக்ஷா வாகனங்களை ஓட்டி வயதானவர்களை தரிசனத்திற்கு சென்று விட்டனர். மேலும் மாற்றுத்திறனாளி பக்தர்களை தங்களுடைய தோளில் சுமந்து கரடு முரடான பாதைகளை கடப்பதற்கு உதவி செய்கின்றனர். இவர்கள் நாள்தோறும் 180 முதல் 200 பக்தர்களுக்கு சேவை செய்கின்றனர். இதனால் முஸ்லிம் சகோதரர்களை அங்கீகரிக்கும் வகையில் சேவாதாரர் என்று அட்டையை குகை கோவில் வாரியம் வழங்கியுள்ளது. மேலும் முஸ்லிம் சகோதரர்கள் இந்துக்களுக்கு உதவி செய்வது  நாட்டின் சகோதரத்துவம் மற்றும் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றனர் என பலரும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |