ரஷ்யா, எதிரி நாடுகளின் செயற்கைக்கோள்களை குருட்டு தன்மையாக்க கூடிய திறன் வாய்ந்த லேசர் ஆயுதங்களை தயாரித்துக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா தங்களின் எதிரி செயற்கை கோள்களை ஏமாற்றக் கூடிய வகையில் லேசர் தொழில்நுட்பத்தை தயாரித்துக் கொண்டிருக்கிறது. காஸல் நகரில் இருக்கும் ரஷ்ய நாட்டின் விண்வெளி கண்காணிப்பு தளத்தில் கலினா என்னும் புதிய லேசர் அமைப்பு நிறுவப்பட இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது.
இந்த லேசர் ரஷ்ய நாட்டின் எல்லை பகுதியை கடக்கும் பிற நாட்டு செயற்கைகோள்களுடைய ஆப்டிகல் அமைப்புகளை குறிவைத்து தாக்கும். கடந்த 2011 ஆம் வருடத்தில் ரஷ்யா இந்த ஆயுதத்தை தயாரித்தது. தற்போது, அதற்கான பணிகள் நடப்பதால் வருங்காலத்தில் இதை உபயோகிக்கும் வாய்ப்புகள் இருக்கிறது என்று கூறப்படுகிறது.
இது குறித்த விண்வெளி நடவடிக்கைகளை ரஷ்ய அரசு ரகசியமாக வைத்திருந்தது. எனவே, இந்த லேசர் அமைப்பை ரஷ்யா வருங்காலத்தில் எதற்காக உபயோகிக்கும் என்பது இனி தான் தெரியவரும்.