Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

புற்றுக்கோவிலில்…. நடைபெற்ற சிறப்பு அலங்கார பூஜை…. கலந்து கொண்ட பக்தர்கள்….!!

பிரதோஷ விழாவை முன்னிட்டு புற்றுக்கோவிலில் சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டியில் வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் கோவிலில் பிரதோஷ விழா சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனை முன்னிட்டு கோவிலில் சங்கல்பம், கணபதி பூஜையுடன் தொடங்கி ஸ்தபண கும்பகலச பூஜை, ருத்திர ஜெபம், வருணஜெபம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

இதனை தொடர்ந்து சங்கரலிங்க சுவாமி, நந்தியம் பெருமானுக்கு மஞ்சள், பால், தேன், விபூதி, பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இந்த விழாவில் கோவில் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Categories

Tech |