Categories
தேசிய செய்திகள்

“மருத்துவ சேவைகள்” மனிதநேய அடிப்படையில் இருக்க வேண்டும்…. சுகாதார மந்திரி அறிவுரை….!!!

மனிதநேய அடிப்படையில் மட்டுமே மருத்துவ சேவைகள் இருக்க வேண்டும் என மந்திரி கூறியுள்ளார்.

சிங்கப்பள்ளாப்பூர் தாலுகாவில் முத்தேனஹள்ளி பகுதியில் அரசு நர்சிங் கல்லூரி அமைந்துள்ளது. இங்கு மாணவிகளின் மருத்துவ சேவை குறித்து உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாநில சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கலந்து கொண்டார். இவர் நிகழ்ச்சியில் கலந்து கலந்து கொண்டவர்களிடம் மருத்துவ சேவையானது மனிதநேயத்துடன் தான் இருக்க வேண்டுமே தவிர ஜாதி, மொழி, மத அடிப்படையில் இருக்கக் கூடாது என்றார்.

அப்போதுதான் நல்ல டாக்டர்கள் மற்றும் நர்சுகள் சமுதாயத்தில் உருவாவார்கள். அதன் பிறகு சமூக நலனில் அக்கறை கொள்ளும் மாணவ மாணவிகளை நர்சிங் கல்லூரிகள் உருவாக்க வேண்டுமே தவிர பணம் சம்பாதிப்பதில் குறிக்கோளாக இருக்கக் கூடாது. மேலும் மருத்துவர்கள் சமூக வளர்ச்சி குறித்த அக்கறையில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

Categories

Tech |