அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில் அக்கட்சி நிலவரம் குறித்து மூத்த உறுப்பினர் சி.பொன்னையன் பேசியது போன்ற ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் பொன்னையன், ‘இரண்டு கோடீஸ்வர்களில் யாருக்கு கட்சி என்பதில்தான் போட்டி நிலவுகிறது. தொண்டர்கள் இரட்டை பதவியை காப்பாற்றிக்கொள்ள இபிஎஸ் முட்டாள்தனமாக ஓடிக்கொண்டிருக்கிறார். யாரும் கட்சிக்கு விஸ்வாசமாக இல்லை’ என கூறியுள்ளார்.
இந்நிலையில் தான் பேசியது போல சமூக வலைத்தளங்களில் பரவி வரும் ஆடியோவில் இருப்பது தன் குரல் இல்லை என அதிமுக நிர்வாகி பொன்னையன் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும். தன்னைப் போன்ற குரலில் யாரோ பேசி பதிவிட்டுள்ளதாகவும், அப்படி அநாகரீகமாக தான் பேசுவது கிடையாது எனவும் அவர் கூறியுள்ளார்.