Categories
Uncategorized

“குஷியோ குஷி” இந்த மாவட்டத்தில் இன்று 500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்….. சூப்பர் அறிவிப்பு…..!!!!!

பஞ்சபூத தலங்களில் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலுக்கு ஒவ்வொரு மாதமும் பக்தர்கள் பௌர்ணமி அன்று கிரிவலம் செல்வது வழக்கம். இங்கு உள்மாவட்டங்களில் மட்டும் அல்லாமல் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள். அதிலும் விடுமுறை தினங்கள் மற்றும் விசேஷ தினங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி கொண்டிருக்கிறது. இதனால் கிரிவலத்திற்காக வரும் பொது மக்களுடைய வசதிக்காக விழுப்புரம் மாவட்ட அரசு போக்குவரத்து கழகம் சார்பாக பௌர்ணமி அன்று மட்டும் திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

அந்த வகையில் இன்று பௌர்ணமி என்பதால் கிரிவலத்திற்காக சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது. ஜூலை 13ஆம் தேதி காலையிலிருந்து இரவு வரைக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் சென்னை, கோயம்பேடு, தாம்பரம், காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், ஆற்காடு, ஆரணி புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |