நிலவிலும் செவ்வாய் கிரகத்திலும் மனிதர்கள் குடியேறிய பிறகு அங்கு பரமசிவன் கோவில் கட்டப்படும் என்று கைலாச நிர்வாகம் இந்த ஏற்பாடுகளை செய்து வருவதாக நித்தியானந்தா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ஜூலை 13ஆம் தேதி இரவு 8:30 மணிக்கு நடைபெறவுள்ள குரு பூர்ணிமா கொண்டாட்டத்திற்கு நேரடி சத்சங்கம் ஆற்றவும் பக்தர்களுக்கு தரிசனம் அளிக்கவும் இருக்கிறேன்.
இந்த குரு பூர்ணிமா தருணத்தில் நேரடியாக கைலாசத்தில் இருந்து பரமசிவன் அருளும் செய்தி இது. இந்த மூன்று மாத இடைநிறுத்த சமாதியானது அதாவது ஏப்ரல் 13-ஆம் தேதி முதல் ஜூன் 13ஆம் தேதி வரை பிரபஞ்சத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும் மிகப்பெரிய சிறந்த ஒரு நிகழ்வாகும். உங்கள் உயிர் இருப்பில் பரமசித்துவம் முழுமையாக வெளிப்படுகின்றது.
மேலும் சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்தில் பரமசிவன் கோவிலை நிர்மாணிக்க அங்கு மனித குடியேற்றத்திற்காக பணிபுரிந்து வரும் நிறுவனங்கள் மற்றும் நாடுகளுடன் இணைந்து கைலாச வேலை செய்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..நீண்ட இடைவேளைக்கு பிறகு குரு பூர்ணிமா நாளில் நித்தியானந்தா மீண்டும் நேரலையில் தோன்ற இருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக அவரது சீடர்கள் மற்றும் பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.