Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்….. மேட்டூர் அணையில் வெள்ள அபாய எச்சரிக்கை….. சற்றுமுன் அலெர்ட்….!!!

கர்நாடக மாநிலத்தில் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் கடந்த எட்டாம் தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அதனால் மேட்டூர் அணைக்கு கடந்த இரண்டு நாட்களாக நீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 98 அடியாக இருந்தது. இந்நிலையில் காவிரியில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 102 அடியை எட்டியுள்ளது.

இந்நிலையில் கர்நாடகா அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவும் அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் வரும் காவிரி நீரின் அளவு வினாடிக்கு 1.10 லட்சம் கன அடியாக உயர்ந்துள்ளது. இதன் எதிரொளியாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 102 அடியை தாண்டி உள்ளது. அத்துடன் ஒகேனக்கல் மெயின் அருவி,ஐந்தருவி மற்றும் சினி பால்ஸ் ஆகிய அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் கரையோர பகுதிகளில் உள்ள வீடுகளையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மேலும் இதனைச் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |