Categories
சினிமா தமிழ் சினிமா

“இசைப்புயலின் மாயாஜாலம்” இணையத்தில் ட்ரண்டாகும் கோப்ரா பாடல்கள்…. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…!!!

கோப்ரா படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

சீயான் விக்ரம் நடித்துள்ள கோப்ரா திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 11-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தை இமைக்கா நொடிகள், டிமான்டி காலனி போன்ற படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார். இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி செட்டி நடித்துள்ளார். அதன் பிறகு ஜான் விஜய், மிருணாளினி, கனிகா, மியா ஜார்ஜ், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான், கே.எஸ் ரவிக்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ள கோப்ரா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த படத்தின் யுகே மற்றும் ஐரோப்பிய தியேட்டர் உரிமையை அகிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதைத்தொடர்ந்து நேற்று கோப்ரா படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த படத்தின் தரங்கணி பாடல் உள்ளிட்ட அனைத்து பாடல்களையும் படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் இசைப்புயலின் மாயாஜாலம் என்ற தலைப்பில் கோப்ரா படத்தின் பாடல்கள் அனைத்தும் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடல்களை தற்போது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Categories

Tech |