Categories
உலக செய்திகள்

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு தாக்குதல் திறனை ராணுவம் குறைத்து விட்டதா?…. அமெரிக்கா அதிபர் அதிரடி பேச்சு…!!!

சிரியாவின் வடமேற்கு ஜிண்டாய்ரிஸ் நகருக்கு வெளியே அமெரிக்காவின் ஆளில்லா விமானம் ஒன்று வான்வெளி தாக்குதலில் ஈடுபட்டது. அப்போது டாப் 5 ஐ.எஸ் தலைவர்களில் ஒருவரான மற்றும் பயங்கரவாத குழுக்களின் தலைவரான மஹெர் அல்-அகல் கொல்லப்பட்டார். அதனைப் போல நடந்த மற்றொரு தாக்குதலில் அகளின் நெருங்கிய தொடர்பை ஐ.எஸ் மூத்த அதிகாரி ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். இருப்பினும் இந்த வான்வெளி தாக்குதலில் பொதுமக்களை யாரும் கொல்லப்படவில்லை என்று தொடக்க கட்ட ஆய்வு தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலால் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினரின் தோல்வி உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அமெரிக்க மத்திய படையினரின் செய்தி தொடர்பாளர் என ஜோ பாக்கினோ தெரிவித்துள்ளார்.

அதனை தொடர்ந்து ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவரின் இந்த படுகொலையால் சர்வதேச அளவில் திட்டமிட்டு தாக்குதல் நடத்துவதற்கான பயங்கரவாத அமைப்புகளின் திறனில் இடையூறு ஏற்படும் என்று அமெரிக்க படை தெரிவித்துள்ளது. இது பற்றி அமெரிக்க அதிபர் டைட்டன் கூறியது, ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவரான மெஹர் அகலை வான்வழி தாக்குதலில் வீழ்த்தியதில் நம்முடைய அமெரிக்க ராணுவத்தின் ஆண், பெண் மற்றும் நமது நுண்ணுறிவு சமூகத்தினர் வெற்றியடைந்து விட்டனர். அகலின் மரணம் சிரியாவின் முக்கிய பயங்கரவாதியை களத்தில் இருந்து நீக்கி உள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் திட்டமிடல், வளம் மற்றும் செயல்பாடுகளை நடைமுறைப்படுத்துதல் ஆகியவற்றிற்கான திறனை அமெரிக்க ராணுவம் குறைத்துள்ளது. இதனையடுத்து அமெரிக்கா மற்றும் உலக அளவில் அதன் விருப்ப பகுதிகள் மீது மிரட்டல் விடுத்த அனைத்து பயங்கரவாதிகளுக்கும் ஒரு சக்தி வாய்ந்த தகவலை அனுப்பி உள்ளது. மேலும் இந்த வான்வழி தாக்குதல் நமது ஆயுதப்படைகளின் தைரியம் மற்றும் திறமைக்கான ஒரு சான்றாக நிலைத்து இருக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |