Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் புதிய பிரதமர் தேர்தல்….. வேட்பாளர்கள் எண்ணிக்கை 8 ஆக குறைவு…. வெளியான தகவல்….!!!

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது தொடர்ச்சியாக ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருகிறது. இதனால் அமைச்சர்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட எம்பிக்கள் அவரது அமைச்சரவையில் இருந்து வெளியேறி உள்ளனர். அதுமட்டுமில்லாமல் பெரும்பான்மை ஆதரவை இழந்து போரிஸ் ஜான்சன் பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் அக்டோபர் மாதம் வரை போரிஸ் ஜான்சன் பிரதமராக நீடிப்பார் என்று கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து புதிய பிரதமருக்கான பதவிக்கு பல்வேறு நபர்கள் போட்டியில் இறங்கியுள்ளனர். அவர்களில் ஜான்சன் மந்திரி சபையில் நிதி மந்திரியாக பதவி வகித்த, இந்திய வம்சாவளி எம்.பி.யான ரிஷி சுனாக் கடந்த வெள்ளி கிழமை புதிய பிரதமர் போட்டிக்கான தனது அறிவிப்பினை வெளியிட்டடார். அதனைப்போல அமைச்சரவையில் இருந்து பதவி விலகிய பாகிஸ்தான் வம்சாவளி சுகாதார மந்திரி சஜித் ஜாவித், போக்குவரத்து மந்திரி கிராண்ட் ஷேப்ஸ், முன்னாள் வெளியுறவு மந்திரி ஜெரிமி ஹண்ட்,  அட்டார்னி ஜெனரல் சுயல்லா பிரேவர்மென், ஈராக் வம்சாவளி நதீம் ஜகாவி, நைஜீரிய வம்சாவளி கெமி பெடனாக், டாம் டுகெந்தாட், வர்த்தக மந்திரி பென்னி மோர்டான்டும் இணைந்து உள்ளார்.

மேலும் எம்.பி. ரகுமான் சிஸ்டி போட்டியில் உள்ள சூழலில், லிஸ்சின் அறிவிப்பு ஆகியவற்றால், இங்கிலாந்து நாட்டின் அடுத்த பிரதமருக்கான போட்டி வேட்பாளர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்தது. இந்நிலையில் இங்கிலாந்து பிரதமர் தேர்தலுக்கான போட்டியில் இருந்து போக்குவரத்து மந்திரி கிராண்ட், முன்னாள் சுகாதாரம் மந்திரி சஜித் ஜாவித் மற்றும் வெளியுறவு மந்திரி ரகுமான் சிஸ்டி ஆகிய மூன்று பேர் வாபஸ் பெற்றுவிட்டனர். இதனால் இந்த தேர்தலில் இறுதியாக 8 பேர் போட்டியில் உள்ளனர். இவர்கள் அனைவரும் கட்சியில் 20 உறுப்பினர்களின் ஆதரவை பெற்றுள்ளனர். அதனை தொடர்ந்து அவர்கள் முதல் சுற்றி வாக்கெடுப்பில் போட்டியிடுவார்கள். தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களின் முன்பதிவு நிறைந்துவிட்டது. முதல் சுற்று தேர்தலில் 30 எம்.பி.க்களின் ஆதரவை பெற தவறும் எந்த ஒரு வேட்பாளரும் வெளியேற்றப்படுவார். இந்த போட்டி 2 நிலையிலான தேர்தல் முறையில் தேர்ந்தெடுக்க செயல்படுவார். இதற்காக 358 உறுப்பினர்கள், அடுத்தடுத்து நடத்தப்படும் வெளியேறுதல் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு வேட்பாளர்களின் எண்ணிக்கை குறைத்துக் கொண்டே வருவார்கள்.

Categories

Tech |