போப் ஆண்டவர் இலங்கை தலைவர்கள், ஏழை மக்களின் கதறல், அத்தியாவசிய தேவைகளை அலட்சியப்படுத்தக் கூடாது என்று கூறியிருக்கிறார்.
இலங்கையில் கடும் நெருக்கடியான நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் போப் ஆண்டவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இலங்கை குறித்து ஒரு செய்தியை வெளியிட்டிருந்தார். அதில் ஏழை மக்களுடைய கதறல், அத்தியாவசிய தேவைகளை அந்நாட்டு தலைவர்கள் அலட்சியப்படுத்தக் கூடாது என்று கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புனித பீட்டர் சதுக்கத்தில் போப்பாண்டவர் பேசியதாவது, நிதி நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பங்களால் தொடர்ந்து அவதிப்பட்டு வரும் இலங்கை மக்களுடன் நானும் துணை நிற்பேன் என்று கூறியிருக்கிறார். மேலும் உக்ரைன் நாட்டு மக்களுக்கும் தன் ஆதரவை கூறியிருக்கிறார். பைத்தியக்காரத்தனமான இந்த போரை முடிக்க கடவுள் வழி செய்யட்டும் என்று கூறியுள்ளார்.