தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் மாணவர்களுக்கு உதவித்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அரசு பள்ளியில் படித்து கல்லூரிகளில் உயர்கல்வி பயிலும் மாணவியருக்கு மாதம் ஆயிரம் வழங்கும் திட்டத்தில் தகுதியான மாணவிகளிடம் சான்றிதழை பெற அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் உயர் கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் மாதம் ரூ1,000 உதவித்தொகை பெற 3,58,304 மாணவிகள் விண்ணப்பம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவிகள் 1,000 உதவித்தொகை பெற ஜூன் 30ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டு பின் ஜூலை 10ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டது. இந்த நிலையில் மாணவிகள் விவரங்களை பதிவு செய்வதற்கு கடைசி நாள் என்று எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.