மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதிய விபத்தில் வியாபாரி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே புல்லூர் கிராமத்தில் குணசேகர் (40) என்பவர் வசித்து வருகிறார். இவர் பழ வியாபாரம் செய்து வந்துள்ளார். இவர் நேற்று வேப்பூர் கூட்ரோடு அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த ஆட்டோ திடீரென குணசேகரனின் மோட்டார் சைக்கிளின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த குணசேகரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து வேப்பூர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் குணசேகரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.