2022ம் ஆண்டின் மிகப்பெரிய சூப்பர் மூன் இன்று இரவு வானில் தோன்ற உள்ளது. நாசா கூற்றுப்படி இந்த நிகழ்வு 3 நாட்கள் நீடிக்கும். பூமிக்கு மிக அருகே ஆண்டுக்கு 3 அல்லது 4 முறை நிலவு வரும்போது சூப்பர் நிலவு தோன்றும். இது வழக்கத்தை விட 17% அளவில் பெரிதாகவும். 30% ஒளி அதிகமாகவும் இருக்கும். இந்த பெரிய நிலவிற்கு ‘பக் சூப்பர் மூன்’ அல்லது தண்டர் மூன்/ஹே/மெட் மூன் என்று பெயரிட்டுள்ளனர். இதை வியாழக்கிழமை அதிகாலையில் இருந்து பார்க்க முடியும்.
நாசாவின் கூற்றுப்படி, இந்த நிகழ்வு மூன்று நாட்கள் நீடிக்கும். இந்த பௌர்ணமி அன்று நிலவு பூமியை சற்று நெருக்கமாக வருவதால் இப்படி பெரிய நிலவாக, பிரகாசமாக தோன்றும் என்று கூறப்படுகிறது. புதன் கிழமை அன்று நிலவு பூமியில் இருந்து 3,57,264 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.