பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி பத்திரப்பதிவுத்துறையில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை அதிரடியாக எடுத்து வருகிறார். இதன் காரணமாக இதுவரை வரலாற்றில் இல்லாத அளவுக்கு பத்திரப்பதிவுத்துறை அதிக வருவாயை ஈட்டி உள்ளது அதன்படி, பதிவுத்துறையில் 100 நாளில் ரூ.4988 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
அதன்படி, இத்துறையில் கடந்த ஏப்ரல் 1 முதல் ஜூலை 12ம் தேதி வரையிலான வருவாய் ரூ.4,988.18 கோடி கிடைத்துள்ளதாக அரசு கூறியுள்ளது. 2021ம் ஆண்டு இதே காலகட்டத்தில் வருவாய் ரூ.2,577.43 கோடி கிடைத்த நிலையில், இந்தாண்டு கூடுதலாக ரூ2,410.75 கோடி ஈட்டப்பட்டுள்ளது எனவும் அரசு சுட்டிக்காட்டியுள்ளது.