Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்…. ரூ.8,000 சம்பள உயர்வு…. வெளியான சூப்பர் தகவல்….!!!

இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்வு ஏற்படும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் கடந்த வருடம் கொரோனா பரவல் காரணமாக அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டதால் அரசு ஊழியர்கள் அகவிலைப்படி நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி மார்ச் மாதத்தில் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 34% உயர்த்தப்பட்டது. அதன்பிறகு ஜூலை மாதத்தில் அகவிலைப்படி மேலும் உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறை அறவிலைப்படி 4% முதல் 5% வரை உயரலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

இதனையடுத்து ஏப்ரல், மே மாதங்களுக்கான நுகர்வோர் விலை குறியீட்டின் புள்ளி விவரங்களை பொறுத்து அகவிலைப்படி உயரும். ஒருவேளை 5% உயர்வு இருந்தால் ஊழியர்கள் அகவிலைப்படி 39% உயரும். அதனை தொடர்ந்து அகவிலைப்படியானது ஃபிட்மெண்ட் காரணி மூலம் கணக்கிடப்படுகிறது. தற்போதைய நிலையில் ஃபிட்மெண்ட் காரணி 2.57% இருக்கிறது. அது 3.68% உயர்த்தப்பட வாய்ப்பு உள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கான குறைந்தபட்ச சம்பளம் தற்போது ரூ18,000 ரூபாயாக வழங்கப்படுகிறதும் ஒருவேளை ஃபிட்மெண்ட் காரணி உயர்த்தப்பட்டால் குறைந்த பட்ச சம்பளம் ரூ.26,000 உயரும். அதாவது ரூ.8,000 வரை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும். ஆனால் எந்த அளவுக்கு உயரும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்த மாத இறுதிக்குள் இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |