Categories
தேசிய செய்திகள்

வீடு கட்ட வங்கியில் லோன் வாங்குவோர் கவனத்திற்கு…..! எந்த வங்கியில் வட்டி கம்மி தெரியுமா?….!!!!

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக இந்திய ரிசர்வ் வங்கி கடந்த 2022 மே மாதம் ரெப்போ விகிதங்களை உயர்த்தியது. இதன் மூலமாக புதிய மற்றும் ஏற்கனவே வீட்டுக் கடன் கட்டி வருபவர்கள் அதிக இஎம்ஐ செலுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டனர். மாத சம்பளம் இல்லாமலும் கடன் வாங்குபவர்கள் அல்லது கிரெடிட் ஸ்கோர்கள் 750 கீழ் உள்ளவர்களுக்கு வீட்டு கடன் விகிதங்கள் அதிகமாக இருந்தது. எஸ்பிஐ வீட்டு கடனுக்கான குறைந்தபட்ச வட்டி விகிதத்தை ஜூன் 15ஆம் தேதி 7 . 55 சதவீதமாக உயர்த்தியது.  குறைந்தபட்ச கடன் விகிதத்தை 7.05 சதவீதத்திலிருந்து 7 .55 விகிதமாக உயர்ந்தது.

எஸ்பிஐ ஒரு வருடத்திற்கான MCLR விகிதத்தை 7.20 சதவீதத்தில் இருந்து 7.40 சதவீதமாக உயர்த்தியுள்ளது. ஜூன் 15, 2022 முதல் இது நடைமுறைக்கு வருகிறது. அதேபோல் HDFC வங்கியும் ஜூலை 7ம் தேதி முதல் அனைத்து கடன் வட்டி விகிதத்தை (MCLR) உயர்த்தியுள்ளது. ஒரே இரவில், ஒரு மாதம் மற்றும் மூன்று மாத கால HDFC வங்கி MCLR விகிதங்கள் 20 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து முறையே 7.70%. 7.75% மற்றும் 7.80% என உயர்த்தப்பட்டுள்ளது. 6 மாதங்கள் மற்றும் 1வருட காலத்திற்கான, எம்சிஎல்ஆர் விகிதங்கள் முறையே 7.90 சதவீதம் மற்றும் 8.05 சதவீதம் என உயர்த்தப்பட்டுள்ளது. 2,3 ஆண்டுகளுக்கான வட்டி விகிதங்கள் முறையே 20 bps அதிகரித்து 8.15 சதவீதம் மற்றும் 8.25 சதவீதமாக உள்ளது.

பேங்க் ஆஃப் பரோடா அதிகபட்சமாக 30 வருடம் வரையிலான கடன் காலத்தை வழங்குகிறது. பணியாளர்கள் அல்லாத உறுப்பினர்களுக்கான வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் 7.45 சதவீதம் – 8.80 சதவீதம் வரை இருக்கும். அதே சமயம் ஊழியர்களுக்கு குறைந்த வட்டி விகிதமான 7.45 சதவீதம் பொருந்தும்.

Categories

Tech |