Categories
மாநில செய்திகள்

தமிழக காவல்துறையினருக்கு திடீர் எச்சரிக்கை…. டி.ஜி.பி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு…!!!

தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பகுதிகளிலும் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய தெருவோர கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் இருக்கிறது. கடந்த 2016-ம் ஆண்டுக்கு பிறகு தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள் இயங்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டது. இந்த 24 மணி நேர கடைகள் முதலில் மதுரை மாவட்டத்தில் மட்டுமே இருந்தது. அதன் பிறகு தான் படிப்படியாக மற்ற பகுதிகளுக்கும் வர ஆரம்பித்தது. இந்நிலையில் 24 மணி நேரமும் செயல்படும் கடைகளுக்கு சில கட்டுப்பாடுகளும் இருக்கிறது.

இந்த கடைகளை சமீப காலமாக காவல்துறையினர் மூடுமாறு வற்புறுத்தி வருவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதன் காரணமாக தமிழக டிஜிபி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் 10க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இருந்தால் அந்த கடைகளை 24 மணி நேரமும் இயக்கலாம். ஆனால் அதற்கும் குறைவான ஊழியர்கள் இருந்தால் கடைகளை செயல்படுத்த அனுமதி கிடையாது. இந்த அரசாணையை காவல்துறையினர் அனைவரும் பின்பற்ற வேண்டும் என தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அறிவுரை வழங்கியுள்ளார்.

Categories

Tech |