Categories
சினிமா

“பொன்னியின் செல்வன்”…. வெளியான போஸ்டர்…. படக்குழு வெளியிட்ட புது அறிவிப்பு….!!!!

கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக வைத்து இயக்குனர் மணிரத்னம் “பொன்னியின் செல்வன்-1” படத்தை இயக்கி வருகிறார். 2 பாகங்களாக உருவாகவுள்ள இந்த படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி திரைக்கு வர உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகியது. இந்த படத்தில் ஜெயம்ரவி, கார்த்தி, விக்ரம், பிரகாஷ்ராஜ், பிரபு, ரகுமான், திரிஷா, ஐஸ்வர்யா ராய் ஆகிய பல முன்னணி நடிகர்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் பொன்னியின் செல்வன் வெளியாக இருக்கிறது.

இத்திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து லைகா நிறுவனம் வழங்க இருக்கிறது. அண்மையில் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த டீசர் வெளியீட்டு நிகழ்ச்சியில் நடிகர் விக்ரம் சில காரணங்களால் பங்கேற்கவில்லை. இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படக்குழு புது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதாவது நிகழ்ச்சியில் பட்டத்து இளவரசரை தவற விட்டீர்களா..? உங்களுக்கான சிறப்பு எங்களிடம் இருக்கிறது. இது நாளை மாலை 5 மணிக்கு அறிவிக்கப்படும் என்று சமூகவலைதளத்தில் குறிப்பிட்டுள்ளது. அத்துடன் போஸ்டர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டு இருக்கிறது.

Categories

Tech |