தமிழகத்தில் இன்று 2 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக வட தமிழகம், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்கள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
மேலும் தேனி திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் நாளை ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். சென்னையைப் பொறுத்தவரை அடுத்து 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .