Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

விழுப்புரம்  பெட்ரோல் பங்க் மேலாளர்  படுகொலை விசாரணையில் பகீர் …!

விழுப்புரம்: பெட்ரோல் பங்க் மேலாளர் கொலை செய்யப்பட்ட சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் – புதுச்சேரி சாலையில் அமைந்துள்ள கம்பன் நகர் பகுதியில் பிரகாஷ் என்பவருக்குச் சொந்தமான தனியார் பெட்ரோல் பங்க் உள்ளது. இதில் பண்ருட்டியைச் சேர்ந்த சீனிவாசன் (55) என்பவர் மேலாளராகப் பணியாற்றிவந்தார்.

இவர் நேற்று பணியில் இருந்தபோது, வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத ஆறு நபர்கள் பெட்ரோல் நிரப்புவது போல் வந்து, எதிர்பாராத சமயத்தில் மேலாளர் சீனிவாசன் மீது நாட்டு வெடிகுண்டை வீசியும் பயங்கர ஆயுதங்களால் வெட்டியும் படுகொலை செய்தனர்.

ஊழியர்கள் சென்று அவர்களைப் பிடிப்பதற்குள், கொலையாளிகள் அனைவரும் தப்பிச் சென்றனர். தகவலறிந்து வந்த விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார், துணைக் கண்காணிப்பாளர் சங்கர் ஆகியோர் தலைமையில் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய்கள் ஆகியோர் உதவியுடன் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

 

காவல் துறையினர் விசாரணையில், விழுப்புரத்தைச் சேர்ந்த ரவுடி கும்பல் ஒன்று பணம் கேட்டு மிரட்டிய தகராறில், பங்க்கின் உரிமையாளர் என நினைத்து, மேலாளரைக் கொலைசெய்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இக்கொலைச் சம்பவம் தொடர்பான கண்காணிப்புப் படக்கருவியின் (சிசிடிவி) பதிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.

இந்தப் பதிவுக் காட்சிகளை வைத்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.மேலும் ஐந்து பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |