கோரல் பிரின்சஸ் என்ற சொகுசு கப்பலில் பயணிகளிடையே கொரோனா நோய் தொற்று பரவியுள்ளது.
ஆஸ்திரேலியா நாட்டில் குயின்ஸ்லாந்து என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்திலிருந்து கோரல் பிரின்சஸ் என்ற சொகுசு கப்பல் ஒன்று நியூ சவுத் வேல்ஸ் நோக்கி புறப்பட்டுள்ளது. இந்த கப்பலில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் உள்ளனர். இந்நிலையில், கப்பலில் உள்ள மாலுமிகளுக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அங்குள்ள பயணிகளுக்கும் கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து அந்நாட்டின் நியூ சவுத் வேல்ஸ் சுகாதார துறை செய்தியில் கூறியதாவது, “கொரோனா நோய் தொற்று பெருமளவில் கப்பல் மாலுமிகளிடையே பரவியுள்ளது. சிறு எண்ணிக்கையிலான பயணிகளுகே இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு கப்பலில் ஏறுவதற்கு முன்பு தொற்று ஏற்பட்டிருக்க கூடும். இங்கு கொரோனா நோய் தொற்றினால் பாதித்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கப்பலில் உள்ள மருத்துவ குழு சிகிச்சை அளித்து வருகின்றது. இது மித அளவிலான பாதிப்பு என ஆபத்து அளவு பற்றி சுகாதார துறை மதிப்பீடு செய்துள்ளது. நியூ சவுத் வேல்சின் தெற்கு கடற்கரை நோக்கி கப்பல் பயணித்து கொண்டிருக்கிறது.
இந்த கப்பலிருந்து மாலுமிகள் யாரும் வெளியே வரமாட்டார்கள். வெளியே வரும் பயணிகள் அனைவரும் முதலில் தொற்றில்லா பரிசோதனை முடிவுகளை வைத்திருக்க வேண்டும் என கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்தின் தலைநகர் பிரிஸ்பேனுக்கு புறப்படுவதற்கு முன் நியூ சவுத் வேல்சில் இன்று ஒரு நாள் மட்டும் இந்தக் கப்பல் தங்கி விட்டு செல்லும்” என்று அவர் கூறியுள்ளார்.