நடிகர் விஜய்யிடம் வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொண்ட நிலையில் அவரை அழைத்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் AGS நிறுவனத்திற்கு சொந்தமான வீடு , நிறுவனம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பகுதிகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். நடிகர் விஜய் AGS நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட பிகில் படத்தில் நடித்ததால் நடிகர் விஜய்யிடமும் வருமான வரித்துறையினர் விசாரணையை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள வரும் நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் நடிகர் விஜய் நடித்துவரும் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு தளத்துக்கு நேரில் சென்ற வருமான வரித்துறையினர் விஜய்க்கு சம்மன் கொடுத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனால் மாஸ்டர் படப்பிடிப்பு பாதியிலே நிறுத்தப்பட்டது.
தொடர்ந்து விசாரணையை மேற்கொண்ட வருமான வரித்துறையினர் நடிகர் விஜயை அவரின் காரிலேயே வருமான வரித்துறையினர் அழைத்துச் சென்றனர். இது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிகில் படத்திற்காக நடிகர் விஜய்க்கு 50 கோடி சம்பளம் வழங்கப்பட்ட்து குறிப்பிடத்தக்கது.