அமெரிக்கநாட்டின் விண்வெளி மையமான நாசா, ஐரோப்பிய மற்றும் கனடா விண்வெளி மையங்களுடன் இணைந்து விண்வெளியை ஆய்வு மேற்கொள்வதற்காக தொலைநோக்கி ஒன்றை உருவாக்கி இருக்கிறது. “ஜேம்ஸ்வெப்” என பெயரிடப்பட்டிருக்கும் இத்தொலைநோக்கி சென்ற வருடம் டிசம்பர் மாதம் பிரஞ்ச் கயானாவிலிருந்து விண்ணில் ஏவப்பட்டது. மொத்தம் 5 ராக்கெட்டுகளின் உதவியுடன் விண்ணில் இந்த தொலைநோக்கியானது ஏவப்பட்டது. இத்தொலைநோக்கி சூரியனை சுற்றிய புவி வட்டப் பாதையிலிருந்து 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் நிலைநிறுத்தப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் ஜேம்ஸ்வெப் தொலைநோக்கியானது பிரபஞ்சத்தின் அரியபுகைப்படங்களை பூமிக்கு அனுப்பிவைத்துள்ளது. பூமியிலிருந்து 8 ஆயிரத்து 500 ஓளி வருடங்கள் தொலைவிலுள்ள கரீனா நிபுலா பிரபஞ்சம், 1,150 ஒளி ஆண்டுகள் தொலைவில் ஸ்பெக்டர்ம் பிரபஞ்சம், 2 ஆயிரம் ஒளி ஆண்டுகள் தொலைவிலுள்ள சதர்ன் ரிங் நிபுலா பிரபஞ்சம், 290 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஸ்டீபன்ஸ் குவாண்ட் எனப்படும் 5 விண்மீன்களின் தொகுப்பு போன்ற பிரபஞ்சத்தின் புகைப்படங்களை ஜேம்ஸ்வெப் தொலைநோக்கி பூமிக்கு அனுப்பி வைத்துள்ளது.
இந்த நிலையில் கரீனா நிபுலா எனும் பிரபஞ்சத்தில் மலைமுகடு போன்ற பகுதியில் நட்சத்திரங்கள் ஒளிரும் நிகழ்வை ஜேம்ஸ்வெப் தொலைநோக்கி புகைப்படமாக எடுத்து அனுப்பி இருக்கிறது. கரீனா நிபுலாவின் என்.ஜி.சி 3324 என பெயரிடப்பட்டுள்ள இப்பகுதியில் இருந்தே நட்சத்திரங்கள் உருவாகலாம் என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். இப்பகுதியில் சிறிய முதல் பெரிய நட்சத்திரங்கள் ஒளிர்வதை தொலைநோக்கி புகைப்படமாக எடுத்து இருக்கிறது. கரீனா நிபுலா பிரபஞ்சம் வாயு, துகள்கள் நிரம்பியதாகவும் அந்த மலை முகடு போன்ற பகுதியிலிருந்து நட்சத்திரம் உருவாகுவதாகவும் நாசா தெரிவித்து உள்ளது. நாசா வெளியிட்டு உள்ள இப்புகைப்படங்கள் பிரபஞ்சத்தின் பல மர்மங்களை கலைத்துவிடலாம் என்று நம்பப்படுகிறது.