பிரபல நாட்டில் தற்காலிக அதிபர் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை நாட்டில் பொருளாதார நெருக்கடி மற்றும் அத்தியாவசிய விலை உயர்வின் காரணமாக கடுமையான போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், கடந்த 9-ம் தேதி அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். இந்த தகவலை ரகசிய உளவாளிகள் மூலம் முன்கூட்டியே தெரிந்து கொண்ட கோத்தப்பய மற்றும் அவருடைய குடும்பத்தினர் நாட்டை விட்டு வெளியேறி மாலத்தீவுக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக மீண்டும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
இந்தப் போராட்டக்காரர்களை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக ராணுவத்தினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசுகின்றனர். இந்நிலையில் பிரதமர் மாளிகையை ஏராளமான மக்கள் முற்றுகையிட்டதால் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து தற்காலிக அதிபராக ரணில் விக்கிரமசிங்கே நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார். அதோடு கோத்தப்பய ராஜபக்சேதான் ரணில் விக்ரமசிங்கை தற்காலிக பிரதமராக அறிவித்துள்ளார் எனவும் சபாநாயகர் கூறியுள்ளார். மேலும் ரணில் விக்ரமசிங்கே அதிபராக இருக்கும் போதே கோத்தபய ராஜபக்சே மாலத்தீவில் இருந்து துபாய்க்கு குடியேறுவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.