குடும்பத் தலைவராக பெண்ணின் பெயர் இடம் பெறுவது அவசியம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் முன்னுரிமை பெற்ற 2 லட்சத்து 86 ஆயிரம் ரேஷன் கார்டுகளில் குடும்ப தலைவராக பெண்களின் பெயர் இடம் பெறுவது அவசியம். அதற்காக பெண் பெயர்களில் மாற்றம் செய்ய அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் ஒன்பது தாலுகாவில் 7,74,583 ரேஷன் கார்டுகள் உள்ளது. இதன் மூலமாக 21 லட்சத்தி 83 ஆயிரத்து 449 பேர் ரேஷன் பொருள்களை பெற்று பயனடைந்து வருகின்றனர்.
முன்னுரிமை பெற்ற ரேஷன் கார்டுகள் 2,50769. முன்னுரிமை இல்லாத கார்டுகள் 5,23,814. எனவே மத்திய அரசின் உத்தரவின் பெயரில் முன்னுரிமை பெற்ற கார்டுகளில் பெண்களே குடும்ப தலைவராக இருக்க வேண்டும். தமிழகத்தின் பிஎச்எச் என்ற முன்னுரிமை பெற்ற கார்டுகள் மற்றும் அந்திநோயா அன்னை யோஜனா காடுகளில் பெண்கள் குடும்ப தலைவராக இருக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பெயரில் மாவட்ட வாரியாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டு குடும்ப தலைவர் மாற்றப்பட வேண்டிய கார்டுகள் கண்டறியப்பட்டு வருகின்றன.